search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிக்கி சேலஞ்ச்"

    ரெயிலில் இருந்து இறங்கி கிக்கி சேலஞ்ச் நடனம் ஆடி கைதான 3 பேரை ரெயில் நிலையத்தை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
    மும்பை :

    கனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.

    ‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உலகம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 

    ஒரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது. 

    இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், சண்டிகர் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.



    இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த 3 பேர் அம்மாநிலத்தின் வசாய் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கி பாடலுக்கு கிக்கி சேலஞ்ச் நடனம் ஆடியவாறு வீடியோ எடுத்து  இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.  அந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் பார்க்கும் அளவிற்கு வைரலாகியது.

    இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு வசாய் ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

    வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில் அவர்கள் 3 பேரும்  காலை 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் வசாய் ரெயில் நிலையத்தை 3 நாட்களுக்கு சுத்தம் செய்யம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories
    ×